உளமெனும் படர்மணல் உயர்ந்தெழும் நினைவுகள்

படர்மணல் நிலமென
துளமிதை அழகே,
நீ கேளாய்….!

சுடரொளி யறிவெனு
மொருதழ லுதித்திட,
ஒருதினம் விழைந்தேன்…!

இடர்பல தொடரென
குடிபுக வரினும்,
இடியெனு நகைதரு
கரடிகள் தொடினும்,
தொடர்ந்தொளி பெறநிதந்
துடிப்புடன் விழைந்தேன்…..!

சிறகதை விரித்தியல்
பொடுசுழல் விசையதை
மனத்தினில் கொடுத்திடு
நினைப்பெனும் பறவை…!

நிகழ்கணப் பொழுதிலும்
நிழலெனத் தொடர்ந்தெனை
நிலையென விருப்பதைத்
தடுத்தழிக் கும்!

நடப்பதன் நடுவினுள்
திகழ்கரு வெதுவென
நினைக்கையில்,
நடந்ததைத் திரும்பவும்
நடந்துளம் நினைந்திட
படபடபடவென வெழுமே…!

நெளிவுறு புழுக்களை
சிதற்படும் வெறுப்பினை
லபக்கென விழுங்கிட
விரும்பிடும் பறவை…!

சினந்தனில், வெளியிடும்
விடந்தனில் விளைந்திடு
கருநெளி புழுவதை
விழுங்கிட, லபக்கென
விரும்பிடும் பறவை…!

விரட்டிடும் வழிதனை
விழைந்துட னுளமது
தவித்திட தளிர்த்தது
ஒளியே….!

விசித்திர வொளியது
வடக்கினி லுதித்துபின்
எதிர்த்திசை நிலைபெறும்
பொழுதில்,
செழுந்தழல் தருமதன் தகிப்பில்,
எழுந்துயர்ப் பறந்தனவே……!!

மணல்வெளி,
அலைவது விடுபட
அகந்தனி லகப்படும்
அரும்பொருள் தருமதை
தரும்வழி தடுக்கிட,
இருவறை தனில்கரம்
நுழைத்தெதிர் வரும்வழி
முகிலென நடக்கின்றேன்…..!
யான், இளநகை யுகுக்கின்றேன்……!

*********************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Aug-15, 6:37 pm)
பார்வை : 334

மேலே