ராஜராஜனின் ஆட்சி காலம்

சோழவள நாடு எனும் கரை புரண்ட கடலில்
வானவன் மஹா தேவி எனும் வளமிகு சிப்பிக்குள்
கிடைப்பதற்கு அறிய முன்று முத்துகள் விளைந்தன!

நவரத்தினங்கள் பதித்த மேனி வனப்புடன்
விளைந்தது முன்றாவது முத்து!
பஞ்சவர்ணகிளியொத்த ஆழகு ஆதலால் அருள்மொழியானான் !

அவன் வனப்பில் மயங்கி நீர்சுழல் கூட
திக்கு முக்காடிய போது
பொன்னித்தாய் கரம் நீட்டி காப்பாற்றி
பொன்னியின் செல்வன் ஆக்கி கொண்டாள்!

தமிழர்க்கும் வேண்டும் ஒரு தசரத ராமன் என
இறைவன் படைத்த சுந்தர சோழனின் ராமன்
தந்தை சொல்லே தாரக மந்திரமாய் கொண்டவன்!

பெண்குலம் போற்றும் உத்தமன்
தமக்கை காலால் இட்ட பணியை
சிரசில் ஏற்று செய்தவன்!

மணிமகுடம் தரிக்க ஆசைகள் அற்ற மன்னவன்
தன் சிரசு ஏற விருந்த மகுடத்தை
இன்னொருவன் தலை சூட்டி அழகு பார்த்தவன்!

கேரளா முதல் இலங்கை வரை
தன் எல்லையை நீடித்த வீரன்
அத்தோடு மக்கள் தம் நலன் மீதும்
அக்கறை கொண்ட பேரரசன்!

சைவனாய் பிறந்த போதும்
பிற மதத்தை துன்புறுத்தாதவன்
புத்த பீடங்களுக்கு இருகரம் நீட்டி உதவியவன்!

காலத்தால் அழியாத தஞ்சை கோயில் கொடுத்தவன்
நாட்டிற்கே ஒற்றை குடை நிழல் கொடுத்த உத்தமன்
இன்று பகலவனின் பாசறையில்
குடை இன்றி நிற்கிறான்!

எழுதியவர் : Narmatha (18-Aug-15, 3:37 pm)
பார்வை : 64

மேலே