மௌனத்தின் மகத்துவம்
மன வீணை
எழும் ராகம்
பலர் ஏற்க
சுதி சேரும்
இல்லையெனில்
மனம் நோகும்
மதி தீரும்
சுயம் வெளுக்கும்
சுற்றம் வெறுக்கும்
கண நேரம்
கடிந்தாலும்
கசக்கும் வாழ்வு
எனினும்
சுயம் நலமாக
சுற்றம் வேண்டின்
மன வேகம்
குறைப்பீர்
மௌனத்தின் மகத்துவம்
அறிவீர்!