மனதினை உணர எத்தனை தோல்விகள்

அண்டங்கள் தாண்டி
ஆராய்கிறது அறிவியல்
அதல பாதாளத்தையும்
விட்டு வைக்கவில்லை ஆராய்ச்சி !

எங்கோ இருக்கும் கிரகத்தின்
எல்ல அசைவுகளையும்
தெள்ள தெளிவாய் காட்டுகிறது
சேட்டிலைட் புகைப்படம் !

உடலில் ஊர்ந்து சென்று
உள்ளதை உள்ளபடி காட்டும் எக்ஸ்ரே
எறும்புக்குள்ளும் என்ன இருக்கிறது
என்று ஆராய்கிறது நுண் கருவி !

கூந்தலையும் கோடி துண்டுகளாக்கி
கூர்ந்து கவனிக்கிறது விஞ்ஞானம் -
இப்படி எல்லாம் இருந்தும் ..............

மனதிற்குள் இருப்பதை
அறிந்திடும் ஆராய்ச்சியில்
அறிவியலும் தோற்றதாகவே !

ஆழ்மனதின் என்ன ஓட்டங்கள்
எவராலும் என்றைக்கும்
கண்டுபிடிக்க முடியாததாகவே !

மனம்
மணந்த மனைவிக்கு கூட
புரியாத புதிராகவே -
இன்றைக்கும் , என்றைக்கும் !

கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Aug-15, 8:25 am)
பார்வை : 73

மேலே