அன்பே நீ வந்தபோது -14நெருப்பு எதுவென்று சொல்லிவிடு
தென்றல் காற்று
தேரசைய
அதில் நீ
தேவதை மேகமாய்
பறந்து செல்வாய்
உன் பின்னால்
நன் வானம்பாடியாய்
கானம்பாடி வருவேன்!
நீ
மலையை முத்தமிட்டு
எனக்கு
மதுமழை பொழிவாயா!
நீ வரும்
அடுத்த நொடி
எப்படி இருக்கும்
அது உயிரோடு
ஒட்டி உறவாடும்
தீயல்லவா!
பெண்மையே,
பூக்களை சிரிக்கவைத்தாய்
பொழுதினை நிறக்கவைத்தாய்
அன்னத்தை நடக்க வைத்தாய்
அமுதத்தை இனிக்க வைத்தாய்
என்னை மட்டும்
மயங்க வைத்தாய்!
மின்னலைப் பார்த்து
நான் கேட்டிருக்கிறேன்
மலரை மணக்க
நான் தொட்டிருக்கிறேன்
தேன் எனக்கு
இனித்தது மட்டுமே!
ஆனால் ...
சுவைத்துப் பார்க்கும்போதே
மெய்சிலிர்க்கக் கேட்டு
மூச்சடைத்து
நின்றேனே உன்னால்!
ஓசைபடாமல் வந்த
உன் விழித்தென்றல்
என் ஆசை அலைகளை
எழுப்புகிறது!
உன் கண்கள் மதுவல்ல
அதைக் குடித்த தேவதைகள்!
உன் கண்கள் மலரல்ல
அது வடித்த தேனலைகள்!
அமுதம் ததும்பும்
அழகிய விழிக்குடங்களை
என்மீது
போட்டு உடைக்காதே!
என் ஆன்மாவையே
குடித்துவிடும்
உன் கண்களின் மீதா
என் இதயத்துக்கு
தாகம்!
என் ஏக்கத் துளிகளை
நீ முத்தாக வைத்து
மூடிக்கொள்
என்றாவது நான்
எடுத்துகொள்வேன்
இனிய முத்தங்களாய்!
அழகை நீ
எப்படி வேண்டுமானாலும்
சொல்!
அதற்கு எடுத்துகாட்டு
நீதானே!
எனது மூளையின்
செல்களில் எல்லாம்
உன் கண்களின்
சிராய்ப்புகள்தான்!
இப்போது என்னால்
எதை
பதிவு செய்ய முடிகிறது
உன் எழில் மிகுந்த
பருவத்தைத் தவிர!
உன்
கூந்தலைப் போட்டு
என்னை
குளிர்க்காயவதற்குள்
எனக்கு
நெருப்பு எதுவென்று
சொல்லிவிடு!