அரசியல் வியாபாரிகள்

வானவில்லில்
சேலை நெய்வார்கள்
நிலவொளியில்
மின்சாரம் தருவார்கள்
இல்லாத கருப்பு பூனையை
இருட்டறையில் இருக்கும்
பிரவிக்குருடனுக்கு காட்டுவார்கள்
உரிமையை நம்மூர் பெட்டிக்கடையில்
குச்சு மிட்டாய் போல
வாங்கித்தருவார்கள்
இத்தனைக்கும்
தேர்தல் வரவேண்டும்
நமது அரசியல் வியாபாரிகளுக்கு