அவசரம்

எந்தக் காலையைப் போலவே
அந்தக் காலையிலும் அவசரமெனக்
கிளம்பி சிற்றுண்டித் தவிர்த்து....

வீடெல்லாம் அலசி வாகனச்சாவிக்
கொய்து...

புதிதாய் விளைந்த சட்டத்தில் வந்த
சிரமத்தில் தலைக்கவசமணிந்து...

ஒசோன் வெளிப்படலத்தில்
முழு வேகத்தில் விரைந்து....

தடுத்துவிட்ட வெண் தேவதைக்கு
அகப்பட்டதைக் கொடுத்து……

எங்களூர் ஆலயத்துக்கு பத்து நிமிடம்
தாமதமாகத்தான் வந்தாரென்றாலும்....

அம்முக்குட்டியைத் தரிசித்துவிட்டார்
கடவுள்.

எழுதியவர் : தர்மராஜ் (20-Aug-15, 11:40 pm)
Tanglish : AVASARAM
பார்வை : 224

மேலே