நான்+அவள்=நாங்கள்

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு தாயால்கூட
உணர முடியா
உணர்வு,
நாம் பிரிந்திருந்த
அந்த நொடியில்
இருந்து நமக்குள்ளும்... """"
===============================
===============================

" ஆயிரம் கவிதை
நான்
பிறருக்கு
எழுதினாலும்,
உனக்கு
ஒரு கவிதை
எழுதுவதுபோல்
வருமாடி .....""""
===============================
===============================

" உனக்கு கருப்பு நிறம்
பிடிக்காவிடில்
உன் முகத்தில் உள்ள
கரும்புள்ளிகளும்,

என்னை வெள்ளை நிறமாக
மாற்றிவிடு
என்று கடவுளிடம்
சண்டை இடுமடி ..""
===============================
===============================

"உன் முன்
நான் ஒரு
போக்குவரத்துக் காவலன்,

ஏனென்றால்
நீ என்னைப்
பார்க்காமல்
செல்லும்போதெல்லாம்
துரத்தியே வருகிறேனடி....""
===============================
===============================

"நான் உனக்குள்
முற்கள் என்றால்,
நீ எனக்குள்
என்றும் பூக்களடி.."'
===============================
===============================

"விடிய விடிய கொட்டும்
மழையைப்
பார்த்து ரசிக்கும்
என் கண்கள்,

ஒரு சொட்டு
உன் கண்ணீரைக்
காண நடுங்குதடி .....""
===============================
===============================

"இரண்டில் ஒன்றை
தேர்வு செய்!என்று
கடவுள் என்னிடத்தில்
கேட்டபோது,

சொர்க்கத்தில்
அவளை வைத்து,

நரகத்தில்
என்னை வைத்துவிடு
என்றேன்..

'காரணம்'

எனக்கு
நரகமே
நிரந்தரம்

அவளுக்கு
சொர்கமே
சுதந்திரம்....""""""
===============================
===============================

"விண்ணில்
மதிகூட மறைந்தது,
என் கண்ணில்
மதியே(அவளது பெயர்) நின்றது...""""
===============================
===============================

'உனது
உள்ளங்கையைப்
பார்க்க வேண்டும்
என்பதற்காக,

'நான்
ஒரு ஜோதிடன்'
ஆக நினைத்தது
ஒரு புது அனுபவமடி..""""
===============================
===============================

"அடிக்கடி
எனக்கு
விருந்து
வேண்டாமடி,

என் கண்களுக்கு
மட்டும் வேணுமடி,

அடிக்கடி
என் கண் முன்னே
வந்துப்போடி...""""
===============================
===============================

"என் கண் எதிரே
நீ
நிற்கும்போதெல்லாம்,
உன்
நிழல் அருகில்
நான் இருப்பதுபோல்
உணருகிறேனடி..."""
===============================
===============================

"ஒரு பெண்ணிற்குள்
அழகு இருப்பதை-விட,
அந்த அழகிற்குள்
ஒரு பெண் இருப்பதை-விட
சிறந்தது எதுவும் இல்லையடா.....""
===============================
===============================

"உடம்பு மொத்தம்
நீ
இருக்கவேண்டும்
என்பதற்காக,

இரத்தத்திடம்
போயெல்லாம்,

உனக்கு நான்
என்ன பரிகாரம்
செய்ய வேண்டும்

என்றெல்லாம்
கேட்டேனடி....""""
===============================
===============================

"நான் உன்னை
தொடும்போதெல்லாம்
ஒவ்வொரு
தொட்டாச் சுருங்கிப் பூக்களுக்கும்,

உன் மேல் கோவம்
உண்டாவதற்கு
உனது வெக்கமே
"முதல் காரணமாம் ""
================================
================================

" இறுதியாக
நான்
நீயாக இருக்கிறேன்,

அமைதியாக
நீ
நானாக இருக்கிறாய்,

உறுதியாக
நீயும் நானும்'
நாமாக இருக்கிறோம்,

நாமாக இருப்போம்,
நாமாக இறப்போம்......................"""""""""

இப்படிக்கு
munafar+____________=?????????


======================================================================================================

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (21-Aug-15, 6:54 pm)
பார்வை : 707

மேலே