ஜன்னல்

காற்றுக்கான கால்வாய்.
இருளுக்கான விடை.
எதிர்பார்ப்புக்கான
சிறு குறிப்பு...!
எதிர்பாராதவைக்கான
முன் தயாரிப்பு...!
இளமைக்கான தொலைநோக்கி...!
முதுமைக்கான புகைபோக்கி...!
வாழ்வைத் தொடங்குபவனுக்கு இதுவும் ஒரு உலகம்...!
வாழ்ந்து முடிந்தவனுக்கு
இதுவே உலகம்...!