கந்தல்

கந்தல்
மகனோ கிழிந்த சட்டையை
தூக்கி எறிந்துவிட்டு அம்மா
வாங்கிவந்த புதுசட்டையை
அணிந்துகொண்டு நண்பர்களுடன்
அரட்டை அடிக்க சென்றான்
தூக்கி எறிந்த சட்டையை சேலைக்கு மேலே
அணிந்துகொண்டு கூலி வேலைக்கு
சென்றால் தாய் அவள்தான் தாய்
இன்னும் ஒரு நாளில் அவளையே
கந்தலென தூக்கிபோடுகிறான்
தாரத்தின் அன்பினால்!