கண்ணீரோடு வாழும் மனித மீன்கள்

உப்பு காற்றோடு உறவாடி தினம்
எங்கள் உணவுக்காக கடலிலே
பல உயிர் தேடி.....
வறுமையில் வாழும் எங்கள் உயிர் பல கோடி...
உயிரை பணயம் வைத்து இங்கே கடலிலே மீன் படித்து பாட்டுபாடி♪♪
தினம் கடல் மாதாவின் --மடியிலோ
தவழ்ந்தோடி....
பேரலை வந்தால் முகாமில் கூடி....
கடல் மாதாவின் கோவம் தனிந்தபின் - எம்
உடமைகளையும் உறவுகளையும்
கண்ணீரோடு தேடி......
இறந்த மீன்களை கழுகுகள் தின்னும்
கூடி...... கரை ஒதுங்கிய மீனவனின்
சடலம் புகைப்படமாக பத்திரிக்கையில் வந்த பிரிதிகள் எத்தனைக் கோடி.....
பணம் எனும் வாழ்வாதாரம் தேடி படகிலே இயற்கையுடன் தினம் நரகமாக போராடி..........
இறந்து கரை ஒதுங்கிய மீனவன் சடலங்களின் மதிப்புத்தான் எத்தனை
லட்சம் கோடி....கோடி......