வாழ்வின் சன்னல்கள் - உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
விதைகள்
வீரமுள்ள மனங்களால்
விதைக்கப்பட்டிருந்தாலும்
தானாகவே
மண்ணில்
புதைப்பட்டிருந்தாலும்
நிச்சயம் ஓர்நாள்
மண்ணினை கிழிப்பது
உறுதி
அது
மரணத்தின் கதவினை
தட்டாதவரை ...!
தீக்குச்சியின் வாழ்விற்கு
இதமான தென்றலுக்கும்
இமைதுறவா வாழ்வளிக்க
வல்லமை உண்டு
எரிமலையின் வாழ்விற்கு
முற்று காணா ஆழியின்
அடிப்பகுதியிலும் வாழ
பல வழிகள் மட்டுமே உண்டு ...!
நாட்கள்
இரவு பகலாய்
வேறுபட்டாலும்
ஆண்டுகள்
கால சூழ்நிலைகளோடு
மாய்க்கப்பட்டாலும்
சில யுகங்கள்
கடந்துச் சென்றாலும்
பல யுகங்கள்
காத்திருந்தாலும்
என்றும் காற்றிக்கு
மரணமில்லை
காற்றின்றி சீவன்களுக்கு
சனனமில்லை
நியதிகள் அழிவதாய்
தோன்றினாலும்
அநீதிகள் செழிப்படைவதாய்
உணர்ந்தாலும்
என்றும் மரணம்
நியதிக்கில்லை
அமர வாழ்வு
நியதிக்கின்றி
வேறொன்றிக்குமில்லை ...!
சில வேளைகளில்
மனதில் கொந்தளிக்கும் எண்ணங்கள்
அதர்மத்தை அழித்துவிட
அதவதாரம் பல எண்ணத்தில் தரிக்கலாம்
அவதாரங்கள் ஒவ்வொன்றாய்
பாசமெனும் அம்பிலும்
ஆரா ரணம் தரிக்கும்
சொல் நஞ்சு அம்பிலும்
அழிக்கப்படுவதாய்
நினைக்கலாம்
நினைத்துக்கொண்ட
மதியிழந்த ஒநாயின்
விழிகளுக்கு தென்படுவதில்லை
அடக்கமுடியா ஆவேசம் கொண்ட
அக்னி சுவாலையின் ஆக்ரோச
வாசல்கள் ...!
முயற்சி என்ற
சொல்லினையே
வேதமாய்
வாழ்வின் அகராதியாய்
படிப்பவன்
இயலாமை என்ற
சொல்லுக்கு
அவன் வாழ்வின் முற்றிக்கு
வழி தேடும் போது மட்டும்
சனனம் அளித்துக்கொண்டே இருப்பான் ...!