புதுமுகர் வரவேற்பு
புதுமுகரே வருக..!
பூந்தளிரே வருக..!
மணலில் நுழைந்திடவே
மழைத்துளியாய் வருக..!
கனலாய் உருமாற
காகிதமாய் வருக..!
புனல் புவி வெளியொடு
அனல் வளி-என
பூதங்கள் ஐந்திங்கும்
புன்னகை சொரிகிறது
பாமாலை சேரவந்த
பாக்களே உமை கண்டு…
வாசல் வந்த வானம்பாடிகளே
வரவேற்கிறோம் உமை – யாம்
இரும்பூது கொண்ட துரும்புகளாய்
கரும்பு காலங்களின் கோப்புகளால்
திராவிடமாய் திரண்டிங்கு
திரவியமாய் மணம்பரப்பி
திராவகம் வார்த்த புளகமாய்
தனித்துவம் எய்த தென்னக அணிவகுப்பு
பதின்நூறு மைல் கடந்து
பகலவா! நின் பார்வையில் சூடேற
புதினஞ் செய்யலொன்ன பொற்கால
பொங்கல் கொண்டாட்டம்...
காலங்களின் மாயம்...
கலாச்சார சாயம்...
நிறத்தூள்கள் அரிதாரமாய்...
நீர்த்த சேறோ படிகாரமாய்...
ஹோலி கொண்டாட்டம்...
சாளரம் தீண்டிய-எம்
சந்தன தென்றல்கள்
நேயர்கள் பார்வைக்கு
நிழற்பட நிரலாய்...
இனி வரும் காலங்களும்
இனிய பொழுதாகட்டும்...
நனி சிறந்த உரையாடல்கள்
நாவிலே உறவாடட்டும்...
பனி தாங்கும் நுனி புல்லாய்
பார்வைக்கு விருந்தாகட்டும்...
நன்றிகள் கோடி..
நவிழ்கிறோம் நாங்கள் கூடி...