கடற்கரை

மலை மலையாய் உயர்ந்த அலை
மண்டியிடும் கடற்கரைகள்

கத்திக்கிடக்கும் கடல் ஒலியின்
உயிர்த்தொடக்கம் கடற்கரைகள்

நிலம் தின்னும் நீல கடலரக்கன்
கரையாமல் கரைக்கும் கடற்கரைகள்

கடலின் தொடக்கமா ? முடிவா?
கடற்கரை
பார்க்கும் பார்வையில் வாழ்வின்
படி சொல்லும் கடற்கரைகள்

எழுதியவர் : இணுவை லெனின் (26-Aug-15, 10:21 am)
Tanglish : kadarkarai
பார்வை : 140

மேலே