சுவிட்ச்கள் பலவிதம்

சுவிட்ச்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்;
புவியில் சிலநேரங் களில்சில பெண்களைப்
பேசா திருக்கச் செய்யும் சுவிட்ச்யிது!

சிலருக்கு செய்யும் செயல்களை ஒழுங்கு
படுத்தும் சுவிட்ச்; சிரமமான காலத்தில்
காலத்தை விரைந்து ஓட்டும் சுவிட்ச்யிது!

நல்ல நேரங்களி லதையே தொடர்ந்து
நிலைக்கச் செய்யும்; மேலதி காரியைச்
சமாளிக்க, நம்கீழ் பணிபுரிப வர்கேட்க வொருசுவிட்ச்!

ஆளுக்கேற் றார்போல வோர்சுவிட்ச், நேரத்திற்
கேற்றார் போலவோர் சுவிட்ச்; விருப்பமான
சுவிட்சமைந்தால் வாழ்க்கை என்று மானந்தமே!

குறிப்பு:

ஆசிரியத்தாழிசை:

மூன்று அடியாகத் தம்முள் அளவொத்து வரும்.
ஒருபொருள் மேல் மூன்று அடுக்கி வரும்.
(அதாவது ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும்)
அவற்றில் வந்த சொற்களே மீண்டும் வந்து பாட்டின் அமைப்பு ஒரே மாதிரி இருக்கும்.

ஆயிரம் பேரை யலுவலகத்தில் சமாளித்து
வீடு நுழைந்தால் பதில்சொல்ல முடியா
கேள்விகளு டன்காத்தி ருக்கும் மனைவியை
சமாளிக்க மௌனமே சிலருக்கு சுவிட்ச்! - மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-15, 8:23 am)
பார்வை : 47

மேலே