சுவிட்ச்கள் பலவிதம்

2011 ல் புதுக் கவிதை

சுவிட்ச்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்;

சில நேரங்களில் சில பெண்களைப்
பேசாதிருக்கச் செய்யும் சுவிட்ச்;

சிலருக்கு செய்யும் செயல்களை
ஒழுங்குபடுத்தும் சுவிட்ச்;

சிரமமான கால கட்டங்களில்
காலத்தை விரைந்து ஓட்டும் சுவிட்ச்;

நல்ல நேரங்களில் அதையே தொடர்ந்து
நிலைக்கச் செய்யும் சுவிட்ச்;

மேலதிகாரியைச் சமாளிக்க ஒரு சுவிட்ச்,
நம் கீழ் பணிபுரிபவர் கேட்க ஒரு சுவிட்ச்;

ஆளுக்கு ஏற்றார் போல் ஒரு சுவிட்ச்,
நேரத்திற்குத் ஏற்றார் போல் ஒரு சுவிட்ச்;

விருப்பமான சுவிட்ச் அமைந்தால்
வாழ்க்கை என்றும் ஆனந்தமே!

2015 ல் மரபுக் கவிதை

சுவிட்ச்கள் பலவிதம் - ஆசிரியத்தாழிசை

சுவிட்ச்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்;
புவியில் சிலநேரங் களில்சில பெண்களைப்
பேசா திருக்கச் செய்யும் சுவிட்ச்யிது!

சிலருக்கு செய்யும் செயல்களை ஒழுங்கு
படுத்தும் சுவிட்ச்; சிரமமான காலத்தில்
காலத்தை விரைந்து ஓட்டும் சுவிட்ச்யிது!

நல்ல நேரங்க ளிலதையே தொடர்ந்து
நிலைக்கச் செய்யும்; மேலதிகா ரியைச்சமா
ளிக்க,நம்கீழ் பணிபுரிப வர்கேட்க வொருசுவிட்ச்!

ஆளுக்கேற் றார்போல வோர்சுவிட்ச், நேரத்திற்
கேற்றார் போலவோர் சுவிட்ச்; விருப்பமான
சுவிட்சமைந்தால் வாழ்க்கை என்றுமா னந்தமே!

குறிப்பு:

ஆசிரியத்தாழிசை:

மூன்று அடியாகத் தம்முள் அளவொத்து வரும்.
ஒருபொருள் மேல் மூன்று அடுக்கி வரும்.
(அதாவது ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும்)
அவற்றில் வந்த சொற்களே மீண்டும் வந்து பாட்டின் அமைப்பு ஒரே மாதிரி இருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-15, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே