ஒரு வழி கிடைக்குமா

எத்தனை போராட்டங்கள்!!

உன் கரங்கள் தீண்ட நிலவும்
இங்கே வழிபார்க்கும்!

உன் முகத்தை பார்க்க அந்த
மின்னலும் இங்கே ஒளிவீசும்!!

உன் பாதம் தொடவே வானும்
தரையாய் மாற வரம் கேட்கும்!

இவள் கூந்தலில் வசிக்க பூங்கா
பூக்களும் தினமும் தவம் இருக்கும்!

அதிஷ்டம் முழுதும் உன்னை தொட்ட உன் சேலைக்கு தான்
தினம் கிடைக்கும்!

நீ நடந்து போனால்
இளையவர் நெஞ்சில் தினம்
திருவிழா ஒன்று மிகச்சொலிக்கும்!

உன்னை உரசிப் போன காற்றுக்கு
தான் உண்மையில் மோகம்
தினம் பிறக்கும்!!

உன் காதில் தூக்கில்லிட்ட
கம்மலுக்கும் சந்தோஷமே
கிடைத்திருக்கும்!

இத்தனை போரட்டங்கள் நடுவே
உன் இதயம் பிடிக்க எனக்கும்
எங்கே ஒரு வழி கிடைக்கும்???

எழுதியவர் : (26-Aug-15, 6:51 am)
பார்வை : 109

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே