‎வெங்காய_கவர்மெண்ட்டு‬


ஏலே கவர்ன்மெண்டு என் வீட்டு
தோட்டத்துல ஊடுபயிரா
வெங்கயத்த நட்டு வச்சேன்

அப்பப்போ கொழம்பு வைக்க தேவையினா
ஓடிபோயி ஒன்னோ ரெண்டோ
தோண்டி எடுத்துகுட்டு வந்திடுவேன்
வெங்காய கோரைய பல்லுல கொரிச்சபடி

எதிர்வீட்டுட்டு காரன் கேட்டாலும்
அக்கம் பாக்கத்தான் கேட்டாலும்
என் கழனி பக்கம்
கைய நீட்டிடுவேன்

வழிப்போக்கன் எவனாச்சும் என்வூட்டு
வெங்கயத்த எனக்கே தெரியாம
நோண்டிகிட்டு போனாலும் வயத்துக்குதானேனு
சந்தோசப்பட்டு சமாதானம் அடஞ்சிடுவேன்

இப்போலாம் விவசாயம் வெளங்காம
விவசாயி தொலங்காம ஆயிப்போச்சு
வெங்காய வெல வெடிமருந்தாச்சு
உரிச்சி பாக்க வரும் கண்ணீரு
இப்போ வெல கேட்டாலே வருது

வெளிநாட்டுல இருந்து வாங்குறோம்னு
சொல்லுறான் வெளங்காத ஆட்சிகாரன்
வெக்கபடாம சொல்லுறான் பதுக்குனா
சட்டம் பாயும்னு பதுக்கல்காரனின் பாதுகாவலன்

யாருக்கு இவனுங்க இறக்குமதி செயுரானுங்க
அன்னாடம் காச்சிக்கா இல்ல அம்பானிக்கா
பஞ்ச பரதேசிக்க டாட்டா பிர்லாவுக்கா

என்வூட்டு நெலத்துல எனக்கு
பயிர் வைக்க காவிரி முல்லை
தண்ணி தொறந்து விட்டா போதாதா

என் மண்ணுல இருக்குற ஏரி
குளம் குட்டை ஆறு எல்லாம்
நீர் தீக்க தூர் வாறினா போதாதா

என் வுட்டுக்கும் ஊருக்கும்
இலவசமா வெங்கயத்த தருவேன்
நாட்டுக்கும் ஒத்த ரூபாக்கு
ஒரு கிலோன்னு விப்பேன்

இப்பேற்பட்ட விவசாயி என்ன கொன்னுட்டு
எப்படி டா நீங்க மட்டும் வாழ முடியும்

கெயில் நியுட்ரினோ அணுவுலை னு
நம்ம வூட்டு மண்ண மலடக்கிட்டு

மாற்றான் தோட்டத்து விளைச்சல
வாங்கிவந்து எத்தன காலம்
அவன் சொன்ன விலைக்கு
வங்கி தின்னுவ

அவனுக்கே போதலன்னு ஓர்
நெல வந்தா எல்லாரும்
மண்ண தான் தின்னுட்டு சாகனும்

விவசாயம் பொய்த்து போனா
ஏன் விவசாயி செத்துப் போறான்னு
இப்பத் தான் வெளங்குது

கடன்பட்டு சாகுறானோ இல்லையோ
காய்கறி வெல கேட்டதுமே சாகுறானு

(செந்தில்குமார் ஜெயக்கொடி)

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 12:59 pm)
பார்வை : 51

மேலே