அறிவியல் ஆயுதம் குருவி எங்கள் இனம்

குருவி எங்கள் இனம்
கூட்டாய் வாழ்வதெப்படியென்று கற்றிருந்தோம்! இன்று
தனிக்குடித்தனங்களுக்கே தர்க்க சிந்தனை இங்கு!.

குருவிகளை அழிக்க தெரிந்த அறிவியலுக்கு
ஒரு கூடு அமைக்கும் அறிவு கிடையாது.
அறிவியலை புரிந்தவர்களுக்கு அதை
பாதகமின்றி பயன்படுத்த தெரியவில்லை!

பிளாஸ்டிக் எல்லாம் பழகிப் பாழானபின்தான்
பயன்படுத்துவது தவறு என்று பாடம் கற்றோமே!
புகை பிடிப்பது பற்றி சொல்லாமல் சொல்கிறோம்
வரிகொள்ளைக்காக அரசும் விற்காமல் விற்கிறது!

பச்சையம் போன பின்தான் காய்கறியே கைக்கு கிடைக்க
பாழாய் போகின்றதே அவை மேல் அள்ளிதெளிப்பவனவற்றால்
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலுமே
அறிவியல் கூட ஆரோக்கியத்தை அசுத்தம் செய்கிறதே!

ஆற்றுப்படுகையில் ஆடு மாடு போனாலும் ஒன்றும் ஆகாது,
ஆனால் மனிதன் நடந்து போனால் மாற்றம் பாருங்கள்
பசும்புல் கூட பட்டுப்போய், பாதையெங்கும் சாலை இடுகிறது.

இயற்கைக்கு நாமே எதிரி ஆனோம்
இதுவும் போதாதென்று
அறிவியலையும் ஆயுதம் ஆக்குகிறோமே?

எழுதியவர் : செல்வமணி (27-Aug-15, 12:04 am)
பார்வை : 183

மேலே