அக்கா தங்கை பாசம்
அக்கா :
அன்னையாக இருப்பேன் என் தங்கையே... உன்
அழுகை நீக்கி சிரிக்க வைப்பேன் என்
தங்கையே..!
விழியிலே மகிழ்ச்சியை வெளிபடுத்துவேன்
என் தங்கையே... உன்
விருப்பம் போல் இருப்பேன் என் தங்கையே..!
தங்கை :
தோழியாக பழகுவேன் என் அக்காவே... உனக்கு
தொல்லைகள் கொடுத்தாலும் தாங்கிக் கொண்டாய்
என் அக்காவே..!
விரல் பிடித்து வருவேன்
என் அக்காவே...
வீண் சண்டை போட்டாலும் விளையாட்டாய்
நினைக்கும் என் அக்காவே..!