அதிகாலை ரணக்குறிப்பு
சன்னமாய் புடைத்த
மென் தொடைகளைக்
காட்டியபடி நின்றிருந்த
நித்திலையும்..
சராசரிக்கு சற்றே
பெரிய தனங்கள் தெரிய
முந்தானை ஒதுக்கியிருந்த
மித்திலையும்..
வாடிக்கையாளர்களுக்குச்
சிரித்துக் கொண்டிருந்தாலும்
ஒருவருக்கொருவர்
முறைத்துக்
கொண்டிருப்பதாகவே பட்டது ....!
பின்னிரவு கழிந்து
தொடைகளின் பற்தடத்தில்...
மித்திலையும்..
வலது முலையின்
நகக்கீறலுக்கு நித்திலையும்..
அவர்களுக்கான ஒரே அறையில்..
அவர்களுக்காக
மருந்திட்டுக்
கொண்டும் இருக்கலாம்....
அப்பொழுதில் அவர்கள்
அவர்களுக்குள்ளாக
முறைத்துக் கொண்டிருக்க
மாட்டார்கள்.....!