சாதி என்னும் சதி

சரித்திரம் சரித்திரமாய்
தொடரும் தரித்திரம் ச(ா)தி
.
.
பாமரனின் படிப்பை
பறித்த தீய சக்தி
.
.
அடிமையாக்கிய
ஆங்கிலேயனின்
அற்புத புத்தி..
.
.
உழைப்பவர்களின் உயர்வை
தடுக்கும் உன்னத உத்தி
.
.
.
காமராஜரும் பெரியாரும்
எழுதினர் அதை மாற்றி..
.
.

தமிழா நாட்டிலே
மூன்று தலைமுறையாய்
பெயருக்கு பின்
அதை துறந்து
பெற்றோம் நாம் வெற்றி
.
.
.
.
.
தமிழா அந்த ச(ா)தி யை மறந்தால்
தரணியில் இல்லை
நம்மை வெல்லும் சக்தி..

எழுதியவர் : வேல் ராஜ் .ரா (27-Aug-15, 9:51 am)
பார்வை : 193

மேலே