தோல்வி

தோற்றேன் நான்

முல்லை தேடி பாலை சென்றேன்
தோற்றேன்

கரைகள் தேடி கடல் கண்டேன்
தோற்றேன்

பகல் தேடி இரவில் அலைந்தேன்
தோற்றேன்

பனிதுளி தேடி பகலவன் அடைந்தேன்
தோற்றேன்

நிஜம் தேடி நிழல் தொட்டேன்
தோற்றேன்

காதல் தேடி உன்னை விழைந்தேன்

உணர்ந்தேன்
தெளிந்தேன்

தேடல் மெய் என்றும்
இடம் பொய் என்றும்

எழுதியவர் : சரவணன் (28-Aug-15, 11:41 pm)
Tanglish : tholvi
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே