தம்பி
நீண்ட கால இடைவெளிக்குப் பின்
கிடைத்த சுகமான ஆறுதல் அவன்
கருவில் என்னை சுமக்கவில்லை
பாசத்தால் என் அன்னையானவன்
தோளில் தூக்கி சுமக்கவில்லை
கண்டிப்பில் என் தந்தையானவன்
பிரச்சனைகளில் தடுமாறி நின்றபோது
தட்டிக் கொடுக்கும் தோழனானவன்
எத்தனை பரிமாற்றங்கள் கொண்டிருந்தாலும்
நான் கருவில் சுமக்கா என் குழந்தையானவன்
என்றும் நான் பெருமைக் கொள்ளும்
அன்பில் என் சகோதரனானவன்
(என் தம்பிக்காக)