நட்புக்கு எப்படி வேலியாகும் தாலி

ஒரு கண் அழுதால்,
மறு கண் சிரிக்குமா?
அப்படித்தான்
தோழியே
நீயும் நானும்!
*************
ஊரார் ஆயிரம் சொல்லட்டும்;
நீ என்னைப்பற்றி
உன் கணவனிடமும்;
நான் உன்னைப்பற்றி
என் மனைவியிடமும்
சொல்வோம்,!
அவர்கள் சொல்வார்கள்

நம் நட்பிற்கு இல்லை;
அந்த வானமும் எல்லை!
**************
கல்யாணமானால் என்ன?
கல்யாணத்திற்கு பிறகு
தாய் என்பவள் இல்லாமலா போகிறாள்?
அப்படித்தான் தோழியே,
நீயும் எனக்கு!
****************
நட்புக்கு எப்படி
வேலியாகும் தாலி?
நண்பனின் நண்பன்
நமக்கும் நண்பன் தானே?
என்னவளும் எனக்கு தோழிதான்;
அப்படியென்றால்,
அவள் உனக்கும் தோழிதானே??
*******************
திருமணத்திற்கு பின்
பழகும் நேரங்கள் குறையலாம்;
ஆனால்,
பாசமொன்றும் குறையபோவதில்லையே!!
***************
தோழியே!
நம் நட்பு பள்ளியில்
தொடங்கியதல்லவா?
பசுமரத்தாணி போல்
காலங்கள் பல பேசும்!!
கலக்கமேன்? ?
*******************************

எழுதியவர் : sugumarsurya (30-Aug-15, 4:30 pm)
பார்வை : 215

மேலே