இதயங்கள் பூக்கட்டும்
சொந்தங்கள் இன்றி
தனியானதால்
சோர்வுகள் சொந்தங்களாயின!
இனமழிந்து போனதால்
இடம் பெயர்ந்திடவோ..?
பூத்து குலுங்கிய நந்தவனம்
பொலிவிழந்த வனம்!
நகர்ந்தே சென்று
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆக்ஸிஜன் தேடி நானே
பயணிக்க வேண்டுமோ..?
இன்றேனும் பூக்கட்டும்
இதயங்கள் இங்கு!
சொர்க்கமாய் பூமி மாறிட
சோலைகள் பெருகட்டும்!