இருள்

நெருப்பின் மறுபக்கம்.
புகையின் சேர்க்கை.
சூரியனின் சாவு.
ஒளியின் மறுதலிப்பு.
நிறமற்ற நிறம்.
வெளிச்சத்தில்
வெளிவராப்
புதிர்களை
வெளிக் கொணரும்
உபகரணம்.
புலனாகும் உலகின்
பேரார்வப் பணியாளர்
பின் வாங்கும்
அடர்த்தியான நிழல்.
அலைக் களைந்து
ஒய்ந்த ஆன்மாக்கள்
இளைப்பாறும் தாய்மடி.
நிலவை வருடும்
பறவைகளின்
நித்திய பூங்கா.

எழுதியவர் : உமை (31-Aug-15, 11:36 pm)
Tanglish : irul
பார்வை : 100

மேலே