கண்ணில் கரைந்தேன்

விழியே, என் வெளிச்சமே,
உன் முன் விழுந்து எழுகையில்
எனக்குள் ஏனோ
...விஸ்வரூபம்..

சட்டென மாறிட
அகம் உணர்ந்திட
புறமொன்று புனலாய்
அகம் என்னுள் அனலாய்

சிட்டாய் திரிந்து சீறிப்பாய்ந்து
காட்டாற்று வேகத்தில்
கனன்று இருந்த எனக்குள் இன்று
சுடர் ஏற்றும் சூறாவளி..

நிலவு முக நிழல்
நிஜம் மாற்றிட நான் இன்று குழல்
மௌனமே கீதம் மனதினில் மட்டும்
ரகசியமாய் ஒரு பயம், சோகம்

ஈர்த்திட்டாய் நீ
இனி நான்
உன் நினைவிழை
சிலந்தி..
விழுந்து எழுந்து மீண்டும்
துடித்து எழுந்து
தூரிகை இழையில்
உன் தூண்டில் மீனாய் நான்..

எத்திசையில் நான் நின்றாலும்
உன் திசை தான் எனக்கு
புவியீர்ப்பு விசையாகி போனதே?

என் உலகே ஸ்தம்பிக்க
என் ஊனும் உயிரும் புதியதாய் புரியாமலே துடிக்க

சொல்லேன்
எனக்கு எப்போது புனர்ஜென்மம்!

எழுதியவர் : செல்வமணி (1-Sep-15, 10:07 am)
Tanglish : kannil karainthen
பார்வை : 91

மேலே