தாய் மரம் என்றால் தந்தை வேர்
குழந்தையை பெற்றதோடு பிறப்பது தாய்க்கு குழந்தை மீது அன்பு
குழந்தை பெற்றதும் குழந்தையோடு சேர்த்து மனைவியோடு பிறப்பது தந்தைக்கு அன்பு...
பெண்ணுக்கு தாய் என்ற பட்டமும் பிள்ளைக்கு மகன்,மகள் என்ற பட்டமும் தந்தை அவன் கொடுத்தது .
அவனுக்கென்று நாம் எதுவும் கொடுக்கவில்லை அவனாக எடுத்துக் கொண்டான்..
போரிலிருந்து வந்து போர்வையகிரான் புழுதி படிவதும் புண் படுவதும் என்னமோ போர்வையில்தான்
போர்வைக்குள்ளும் வெளியிலும் அவனறிவான் ஆனால் போர்வைக்கு வெளியில் எதுவும் அவர்கள் அறிவதில்லையே..
என்னைப் பொருத்தவரை தாய் மரம் என்றால் தந்தை வேர்
வேரின் சுமை யார்க்கும் தெரிவதில்லை...