வறுமை எனும் நோய்
இது ஒன்றும் தொற்று நோயல்ல
தொட்டால் ஒன்றும் ஒட்டிக் கொள்ளாது
காற்றின் மூலமும் பரவாது
ஆனாலும் ஏனோ
எட்டிப் பார்ப்பதில்லை எந்த சொந்தமும்
எத்தனைப் பயம் இதனைக் கண்டு
நீங்களே சொல்லுங்கள்
அத்தனை கொடிய நோயா இது.?
"என் வீட்டில் வறுமை நோய்"