எசேக்கியேல் அழைப்புக் கவிதை நாணம் ஏதுக்கடி சகியே
அழைக்கிறேன்
ஏறெடுத்தும் பாராள்! இறங்கியகண் தூக்காள்!சொல்
வேறெடுத்துக் காட்ட விளம்பாள்!கண் - நீரெடுத்து
நின்றாலும் சொல்லாளே நோகும் கடுஞ்சொற்கள்!
என்றாலே பெண்ணென்பேன் யான்!
========== இந்த எனது கவிதைக்கு இதற்கு மாறுபட்ட பொருளில் வெண்பா ஒன்று எழுதித் தர நண்பர்களை அழைக்கிறேன்.
-----காளியாப்பன் எசேக்கியேல்
அழைப்பை ஏற்று மாறுபட்ட பொருளில் ......
நேரெடுத்த பார்வையள் நீள்விழிப் பொற்பாவை
காரெடுத்த வான்முகில் காதல் மழையவள்
கூரெடுத்த வன்முலைக் காரிகை நாணத்தின்
பேரெடுத்தாள் சாடையி னால்
நேரெடுத்த நீள்விழிப் பொற்பாவை காரெடுத்த
வான்முகில் காதல் மழை
நீர்தொடுத்த ஆனந்த முத்துக் களோவிழியில்
நம்மண நாள்நன்நா ளில்
போர்தொடுக்கா நீள்சமாதா னம்தேவை இன்றுதான்
புன்னகை பூநிலாவே சொல்
-----கவின் சாரலன்