மதம் எங்கே??
நான் முகமதியன் அல்ல.
ரமலான் அன்று என் கண்களுக்கும்
பிறை தெரிகிறது..............
நான் கிறிஸ்துவன் அல்ல.
கிறிஸ்துமஸ் அன்று எனக்கும் வானில் நட்சத்திரம் தெரிகிறது.............
நான் இந்து அல்ல.
தீபாவளி அன்று நான் கையில் ஏந்தினாலும் மத்தாப்பு சிரிக்கிறது........
நான் மதம் கொண்டு பிறக்கவில்லை.
அழுதுகொண்டு தான் பிறந்தேன்
மனிதனாக..........
~~தாகு