ஒற்றுமையே வெல்லும்
சிவபுரம் என்ற ஊரில் பொன்னம்பலம் என்ற ஓர் விவசாயி வாழ்ந்து
வந்தார். அவரது தொழில் வேளாண்மை செய்வது. அவர் ஒவ்வொரு பருவமும் தனது வயலில் நெல் விதைப்பார். ஆனால் அவர் விதைத்த நெல்லை அரைப்பாகத்திற்கு மேல் புறாக்கள் வந்து உணவாக உண்டுவிடும். அதனால் பல நாட்களாக மன வருத்தடைந்தார். இந்தப் புறாக்களை எவ்வாறு நெல்லை உண்ண விடாது தடுப்பது என்று யோசனை செய்தார். இதற்காக வேடன் ஒருவனைச் சந்தித்தார். வேடனின் யோசனைப்படி இந்தப் புறாக்களைப் பிடிக்கவேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரு நாள் விடியற்காலை தனது வயல்பரப்பில் வலைகளை விரித்தார். ஆனால், வழமைபோல வந்த புறாக் கூட்டத்திலிருந்து இரண்டு புறாக்கள் மட்டுமே அந்த விரிக்கப்பட்ட வலையினுள் சிக்கிக்கொண்டன. ஆனால், அந்த இரண்டு புறாக்களையும் ஏனைய புறாக்கள் தனியே விட்டுச் செல்லவில்லை. ஏனைய நண்பர்களை மற்றைய புறாக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த வலைக்குள் சென்று அந்த வலையினை இழுத்துக்கொண்டு மேலே பறந்துசென்றன.
நீதி:
ஒற்றுமையாக இருந்ததால் அந்தப் புறாக்கள் வேடன் விரித்த
வலையை இழுத்துக்கொண்டு பறந்துசென்றன. இவ்வாறு நாமும் ஒற்றுமையாக இருந்தால் எல்லா வெற்றியும் எமக்கே. தோல்வி என்பதற்கு இடமே இருக்கமாட்டாது.