HELL =நரகம், MET =சந்தித்தல்

ஹெல்மெட் அணிய வேண்டாம்:
ஹெல்மெட் அணிவதால் நாம் பெரும் மறைமுக நன்மைகள் சில:
1) தற்போது அபரிவிதமாக வாகன தேவை பெருகியுள்ளத்தால் அதை பயன்படுத்தும் போது வெளிப்படும் நச்சு புகை மற்றும் பயணிக்கும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை இயங்கும் தொழிற்சாலைகள்,இதர நிறுவனங்கள் அதிலிருந்து வெளிப்படும் நச்சு புகை,மேலும் காற்றில் கலக்கும் மாசு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து முகம் பாதுகாக்கப்பட ஹெல்மெட் பெரிதும் உதவுகிறது.
உதரணமாக: ஒரு 20 கிலோமீட்டர் வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டு பிறகு காட்டன் வெள்ளை துணியில் முகத்தை சற்று துடைத்து பார்த்தால் உண்மை அவரவருக்கு புரியும்
2)வாகன புகை,சூரிய வெப்ப தாக்குதல்,சுற்று சூழல் மாசு போன்றவற்றால் விலை மதிப்பில்லா நம் இரு கண்களும் பாதுகாக்க ஹெல்மெட் முக்கியமாக பயன்படுகிறது.
3)தூசி காற்று,மாசுடன் கூடிய காற்று போன்றவை நாம் சந்திக்க வேண்டிய கட்டாய சூழலில் நாம் வாழ்ந்து வருவதாலும், வாகன பயன்பாட்டை தடுக்க முடியாததாலும், ஹெல்மெட்டை நாம் கட்டாயமாக பயன்படுத்துவதால் கண் எரிச்சல் போன்றவை தவிர்க்கப்பட்டு நிறைவான தூக்கமும் சுகமான வாழ்வையும் அனுபவிக்க முடியும்.
4) முகத்தின் அழகை கெடுக்காமலும்,இருக்கும் முகத்தின் தன்மையை பாதுகாக்கவும் ஹெல்மெட் பயன்பாடு அவசியமாகிறது..
5)சிறு மற்றும் பெரிய விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கிறது

முகம்,கண்,உயிர்,தன்னை சார்ந்த குடும்பம்,சமுதாயம்,நண்பர்கள் மீதெல்லாம் அக்கரையிள்ளதவர்கள் ஹெல்மெட் நிச்சயமாக அணிய வேண்டாம்.

வருமுன் காப்போம் நோயின்றி வாழ்வோம்,
சாலை விதிகளை மதிப்போம்,சுய ஒழுக்கத்தை கடைபிடிப்போம்,பகுத்தறிவோடு செயல் படுவோம்,சமுதாயத்தை காப்போம்.
சட்டத்தை மதித்து நடப்போம்,காவல் துறையின் அறிவுரையை ஏற்று அவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்: டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
சமூக ஆர்வலர் R .S கஜேந்திரன் சிட்லபாக்கம் BA

HELL =நரகம், MET =சந்தித்தல் "HELMET = நரகத்தில் சந்தித்தல்...ஹெல்மெட்டுக்கும் நரகத்திற்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால் அதை பயன்படுத்துவோம்

குறிப்பு: இன்று நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை,அவர்களின் தேவை,வாழ்வாதாரம்,வணிகம்,வியாபாரம் அன்றாட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் வேகத்துடனும்,விவேகத்துடனும் பணிகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது..வாகன பெருக்கத்தால் ஏற்படும் சாலைகள் ஸ்தம்பிப்பு,நெரிசல்,தாமதம் போன்றவற்றை தடுக்க சில நேரங்களில் வேகமாக வாகனத்தை இயக்க முற்படுதலும், பல சமயங்களில் தன கட்டுப்பாட்டில் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் போதும் எதிர்பாராமல் நேரிடும் விபத்து, மற்ற வாகன ஓட்டிகளின் அஜக்கிரதையலும்,மதுகுடிதுவிட்டு அசட்டு தனமாக போதையில் வாகனத்தை இயக்கி வருபவர்களாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாலை பயணத்தில் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது...ஹெல்மெட் அணிவதால் பெரும்பாலான விபத்துகளின் உயிரிழப்பை நிச்சயம் குறைக்க முடியும்.. அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படும் விபத்து என்பது ஒருவரை மட்டுமோ,அவர் குடும்பத்தை மட்டுமோ பதிப்பது மட்டும் அல்ல...அறிவுரைகளை ஏற்காமலும்,மதிக்காமலும் நடப்பதால் ஏற்படும் விபத்தால் சமூக சீர்கேடு உருவாகிறது விபத்து ஏற்பட்ட பின் மருத்துவமனையில் சேர்த்தல்,பெருமளவு செலவு,அரசின் செலவு,காவல் துறை மற்றும் நீதித்துறை,அவரை சார்ந்த குடும்பங்கள் என அனைவரின் நேர விரயம் மற்றும் மன உளைச்சல்கள் என பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது..

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லப (3-Sep-15, 6:40 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 657

மேலே