அவள் ஆணையிட்டாள்

2011 ல் புதுக் கவிதை

என் காதலி இருக்கும்
கூடமெல்லாம் அவள் லாவண்யம்;
அது தரும் ஒளி வெள்ளம்;

அவள் அழகிய முகமும், கண்களும்
தரும் வசீகரம் ஏராளம், ஏராளம்;

கூடத்து அலங்கார விளக்குகளெல்லாம்
அவள் அழகு கண்டு ஒளி குன்றின,
வெட்கி அவை மயங்கின;

விளக்குகளை எல்லாம் மீண்டும்
ஒளிர அவள் ஆணையிட்டாள்.

2015 ல் மரபுக் கவிதை

அவள் ஆணையிட்டாள் - நிலைமண்டில ஆசிரியப்பா

எனது காதலி இருக்கும் கூடம்
இனிதே அவளின் லாவண்யம் காட்டுமே;
அதுதான் தருமங்கு வொளியின் வெள்ளம்;
புதிதாய்ப் பொலியும் மகிழ்வு வெளிச்சமே! 1

அவளது அழகிய முகமும், கண்களும்
பவளம் போல்தரும் வசீகரம் ஏராளம்;
கூடத்(து) அலங்கார விளக்கு களெல்லாம்
மடவாள் அழகு கண்டொளி குன்றினவே! 2

கூடத்தின் அலங்கார விளக்கெல் லாமே
மடவாள் அழகைக் கண்டுவெட்கி மயங்கின;
விளக்கு களையெலாம் மீண்டும் பளிச்சென
ஒளிர அவளே ஆணையும் இட்டாளே! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-15, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே