யாதுமாகிய கவிதை

பூவின் மேல் பனிசிந்தும்
கணநேரம்..கவிதை ...!
பூங்காற்றில் நுழை
புதுசாரல்கள்.. கவிதை ..!

மைவிழி சிரிப்பில்
மின்னல்கள் ..கவிதை..!
மலைமேலொரு ஓவியமாய்
வெண் அருவிகள்..கவிதை..!

முடிவில்லா வானத்தின்
கடல் எல்லை..கவிதை ..!
தர்மம் தொடர்கின்ற
நிம்மதியும்..கவிதை ..!

நெருப்பிலும் தோன்றிடும்
நளினங்கள்..கவிதை ..!
நிஜத்தன்னில் நிறைவேறும்
கனவுகளும்..
கவிதை..!

ஆணின் படைப்பில்
அழகு மயில்..கவிதை..!
பலத்தில் மாற்றாய்
பெண்புலி..கவிதை ..!

ஜன்னல்வழி பெய்யும்
நினைவுகள்..கவிதை ..!!
சில முகந்தனை மீட்டிடும்
பாடல்கள் ..கவிதை ..!

சிறகில்லா தேவதையின்
மழலைச்சொல்..கவிதை..!
சிரிப்புடன் கடக்கும்
சோகங்கள் ..கவிதை ..!

சட்டெனவே பூத்துவிடும்
சிறுகோபம்கூட..கவிதை ..!
மறுகணமே நீக்கிவிடும்
புன்னகையும்.. கவிதை..!!

இவை உணர பழகிவிட்டால்
நொடி வாழ்வும்..கவிதை..!
ரசிக்காத ஓர் முழுவாழ்வும்
வண்ணமில்லா வறுமை..!!

எழுதியவர் : Ayisha siddeeka (4-Sep-15, 4:10 pm)
பார்வை : 77

மேலே