மண்டியிட்டு மரியாதை செய்வோம்

அகில மெங்கிலும் உள்ள கல்வி கூடங்களில்
சலிப்பில்லாமல் பாடங்கள் கற்பிக்கும் ஆசான்களே..!

கல்வி தந்தை இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் – 5
ஆசிரியர் தினம் ! தங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பணம் !

அனைத்து கல்வி நிறுவனங்களிலும்
ஆரவாரமில்லாத கொண்டாட்டங்கள்..!

பயிலும் மாணாக்கர்களின் மனமுவந்த வாழ்த்துக்கள் !
அவரவர் சக்திக்கேற்ற அழகழகான அன்பளிப்புகள்..!

உங்களை பிடிக்காத மாணவ மாணவிகளுக்கும்
உங்களுக்கு பிடிக்காத மாணவி மாணவர்களுக்கும்
இன்று மட்டும் உங்களை இருசாராருக்கும் பிடிக்கும் !

கல்வி கடவுளாம் சரஸ்வதி தேவியை
நாங்கள் நேரில் பார்த்ததில்லை
உங்கள் மூலாமாக எதிரில் பார்க்கிறோம் !

அறிவு தெய்வமாம் கலைமகள் தாயை
நாங்கள் கண்களால் கண்டதில்லை
உங்கள் ரூபத்தில் காண்கிறோம்..!

நாவின் வேந்தளாம் நாமகளை - நாங்கள்
நாள்தோறும் நமஸ்க்காரம் செய்ய மறந்தாலும்
கல்வி சாலைக்கு வரும் ஆசிரியர்களே - உங்களுக்கு
காலை நமஸ்க்காரம் செய்ய நாங்கள் மறப்பதில்லை

மாணாக்கர்களுக்காகவே வாழ்நாளை அர்பணிப்பவர்களே
பலபேர் உங்களலால் அடுக்ககங்களாக உயர்ந்தாலும்
உங்கள் நிலையென்னவோ இன்னும் குருவி கூடுகளவே..!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்தான் நல்லாசிரியர் விருதா ?
அரசே! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் கசப்பு கலந்த மருந்தா ?
வேண்டாமே, இந்த ஒரு கண்ணில் வெண்ணை வேலை...
இரு பாலாருக்கும் போர்த்துங்கள் சமமான பொன்னாடை !

விடைத்தாள்களை திருத்தி திருத்தியே விரல் வீங்கி போனவர்களே..!
சிரம்தாழ்ந்து பணிகின்றோம் ஏற்பீர் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை…!

வாழ்க நீவீர் பல்லாண்டு ! வெல்க உமது கல்வி தொண்டு !

இந்த மாட்டிடையர்கள் செய்யும் மகா தப்புகளை மன்னித்து
காட்டுவாசிகளாக இருக்கும் எங்களை கல்வி காசி -களாக்குங்கள்!

எழுதியவர் : இரா.மணிமாறன் (4-Sep-15, 4:05 pm)
பார்வை : 94

மேலே