பெண்ணே அது உன்னால் தானடி
உறவுகள் மறந்து
உணர்வுகள் நிறைந்து
அலைகிறேன் நானடி
அது உன்னால் தானடி
தாய் மொழி தமிழினில்
வார்த்தைகள் கோர்த்திட முயன்று
இயலாமல் உளறுகிறேன் நானடி
அது உன்னால் தானடி
எனகென ஒரு உடல்
அதனுள் ஒரு உயிர்
இருப்பது மறந்து தவிக்கிறேன் நானடி
அது உன்னால் தானடி
இரு விழிகள் இருப்பது
உலகை ரசித்திட தானே
உன் திசை மட்டும் அது பார்கிறதே
அது உன்னால் தானடி
உறங்கிட இறைவன் தந்த இரவுகள்
கனவுகள் நிறைந்ததாய் மாறி போனதே
உறக்கம் துளைத்து மறு பகல் போல் ஆனதே
அது உன்னால் தானடி
ஒவ்வொரு உயிருக்கும் காரணம் உண்டாம்
அடியே என் பிறப்பின் காரணம் என்ன
அதன் அர்த்தம் முழுமை பெற்றிடும் இங்கு
அதுவும் உன்னால் தானடி .....!!!