தாயே கடவுள்

கடவுள் வேறெங்குமில்லை
தாயே கடவுள்;

தாயின் பிரார்த்தனைகள்
தன் பிள்ளைகளுக்காக;

என் மனதுக்கு
இதம் தருவது தாய்;

என் துன்பத்துக்கு
தோள் கொடுப்பதும் தாய்;

தாயிடம் காட்டும் அன்பே
நாம் தரும் காணிக்கை;

தாயின் அன்புக்கு
விலை மதிப்பில்லை;

தாயின் அன்புக்கு
உலகையே தந்தாலும்
என் கால் தூசு உலகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-15, 1:54 pm)
Tanglish : thaayaye kadavul
பார்வை : 446

மேலே