பருவமும் பாவமும்
இளகிய மனத்தினர்
இளம்மடந்தைகள்
என்றொறு சொற்களும்
ஏமாற்றம் கண்டன இன்று
பக்குவம் கொண்டவர்
பத்தினி பெண்டினர் என்னும்
மொழியும் பழமையானது
காவியம் கண்ட பெண்டிர்கள்
ஓவியமாய் ஒளிர்கின்றன
ஒருபுறம்
ஊரெங்கும் சிரிக்க ஒழுக்கத்தை
மறந்தன ஒரு கூட்டம்
வயிற்று தெப்பம் காணச்
சென்ற வேளையில்
வயது தெப்பம் வாழ்வினை
வழிந்தோட செய்வதும் தவறே
கண்ணியிடத்தே காரணம்
தேடுவதைவிட
காலம் கருதி கடமை செய்தலே
கண்ணியம் சிறக்கும்