சாதிக்கு ஆணி அடி
வ - க்கு சொல்லிட்டியா வெள்ளை கட்ட..?
அ - க்கு சொல்லிட்டியா மங்களம் முழங்க ?
ப - க்கு சொல்லிட்டியா குருத்தோலை பின்ன..?
ப - கூப்புடு சாவுக்கு பறையடிக்க;
அ - கூப்புடு தாடிய வயிச்செடுக்க;
வ - கூப்புடு வாய்க்காரிசி புடிக்க;
இப்படியான ஏளனப் பேச்சுகள் கிராமப் புறங்களில்
அங்கெங்கெனாதப்படி இன்றும் ஒலித்தப்படி….!
நல்லதிலும், கெட்டதிலும்
துக்கத்திலும், சந்தோஷத்திலும்
ஒத்தாசை புரிபவர்களுக்கு
கிராம புறங்கள் அளிக்கும்
அடித்தட்டு அடிமை ஆணவப் பட்டம்தான்
நாட்டாமைகளின் இராணுவச் சட்டமா ?
வ - வூட்டுல கைய நெனைக்காத
அ - வீட்டு அழகியப் பாக்காத
ப - வூட்டு பொணத்தை தூக்காத
இப்படியான வேண்டாத வார்த்தைகள்
எந்த சட்டத் திட்டங்களையும் மதியாமல்….
ஆனால் இட ஒதுக்கீட்டில் மட்டும்
இருபது விழுக்காடு கட்டாயம் வேண்டுமாம் !
என்ன இது அந்நியாயம் ?
யார் சொல்வார் நியாயம் ?
அரசே நீ ஏமாந்தால்
உனக்கே பூசிடுவார் சாயம் !
து - வெளுப்பவன் இல்லையென்றால்
பழுப்பேறிப் போகுமே உன் ஆடை !
மு - வெட்டுபவன் இல்லையென்றால்
செம்பட்டையாகுமே உன் தலை !
ப - அடிப்பவன் இல்லையென்றால்
பிணவாடை வீசுமே உன் அறை !
பஞ்சாயத்து தேர்தலின்போது மட்டும்
உசந்தவனாக தெரிகின்றானே அம்மூவரும் !
அவன் வீட்டு வாசலில் தேவுடு காத்து
அழைத்துச் செல்கின்றாயே ‘கார்’மூலம் !
சுகபோகமாய் நீங்கள் வாழ;
யுகம் யுகமாய் அவர்கள் தேய;
வெறும் பகல் கனவாய்ப் போனதே
அந்தப் பாவப்பட்ட ஜீவன்களின் ஆசைகள் !
வ - பையலுக்கு வேதாந்தத்தை பாத்தியா
அ - பையலுக்கு அதிகாரத்தை பாத்தியா
ப - பையலுக்கு பாண்டித்தியத்தை பாத்தியா
ச - பையலுக்கு சம்சாரத்தை பாத்தியா
செ - பையலுக்கு சந்தணத்தை பாத்தியா
வி - பையலுக்கு வித்தைய பாத்தியா ?
ந - பையலுக்கு நாட்டாமைய பாத்தியா ?
அட சண்டாளப் பையல்களா….!
முண்டாசு கவிஞன் மட்டும்
முப்பதுல சாகாம இருந்திருந்தா…,
இநேரம் உங்களையெல்லாம்
கண்டம் துண்டமா வெட்டி
காக்கா-களுக்கு போட்டிருப்பான் !
சாதிக்கு சுடுகாடு தள்ளி வச்சான் – அவனை
சந்தண கட்டையிலா கொள்ளி வெச்சான் ?
சுள்ளியிலே கொள்ளி வெக்கும்போதே
கொல்லையிலே போறவனே என்ன ஏத்தம் !
முளையிலே மிளாகாய கிள்ளி வெச்சி
பிஞ்சு நெஞ்சிலே வஞ்சக நஞ்ச தச்சி
சமூக நீதி கேட்பதற்கு - சாதி பித்தனே!
உனக்கென்ன அருகதை இருக்கு ?
ப -ளி, வரலன்னா உன்எழவுக்கு யாரு சங்கூதுவா ?
ஏ - ளி, வரலன்னா உன் சாவுக்கு யாரு பாடை கட்டுவா ?
மு-ளி, வரலன்னா உன் பங்காளிக்கு யாரு தாடி மழிப்பா?
எல்லாம் தெரிஞ்சிருந்தும் எகத்தாளம் பேசுறீயே !
அவன் உழைப்பை சுரண்டிக்கிட்டு அவனயே ஏசுறீயே !
கட்டுன பொண்ஜாதி இருக்க, வேற பெண்சாதியிடம் போறவனே!
உன்சாதி அப்போ உனக்கு உசந்ததாத் தெரியலயா…..?
அட சண்டாளப் பயலே ! சாமின்னு ஒண்ணு இருந்திருந்தா..?
உன்னைத் தொண்டையில குத்தி கொன்னே போட்டிருக்கும் !
வீதிக்கு வீதி நீ சாதி மாநாடு போட்டாலும்
அடிக்கடி உனக்கு பேதி மருந்து கொடுக்க;
ஆதியிலேருந்து ஒருத்தன் இருக்கதான் செய்றான் !
கீழ் சாதிக் காரனென்று என்னை இழிகின்றாய்;
மேல் சாதியில் நீ பிறந்து, என்ன கிழித்து விட்டாய் ?
மேல் நாட்டுக்காரன் நம்மல காரி உமிழுறான்
மேல்தட்டு வாழ்க்கையும் - நரி வேஷமும் ஒன்னுதான் !
வ- தி, வரலன்னா - சமைஞ்ச பொண்ணோட
தூமைய துவைக்க, உன் வெப்பாட்டியா வருவா..…?
அவசர சிகிச்சைக்கு அ- சி, வரலன்னா
உன் சிசுவுக்கு யாரு கியாரண்டித் தருவா ?
அட வெளங்காத வெறும் பையலே !
இப்போதாவதுப் புரியுதா ? உன் சாதி உனக்கு
அவசர உதவிக்கு வராதுன்னு….!
தொழிலை வெச்சித்தான் சாதியப் பிரிச்சான் !
உன் சாதிய வெச்சா தொழிலைப் பிரிச்சான் ?
இன்று சாதிய வெச்சுதான் அரசியலே நடக்குது
அந்த அரசியலே இல்லன்னா உன்சாதியும் ‘0’தான் !
உயர் படிப்பு படிச்சி ஆபிஸ்சுல நாங்க
அயர் ஆபிஸசரா இருந்தாலும்,
பிஸ்கோத்து குமாஸ்த்தாவும் எங்களை
ஒரு தினுசாத்தான் பாக்குறான் !
மனுசால மதிக்காத மானம் கெட்ட சாதிங்க
மலத்தை தின்னுகிற மிருகத்துக்கு சமங்க !
இது எகத்தால பேச்சு இல்ல;
என் நெஞ்சுசுல நெடுநாளா
தச்சிக்கிட்டுருந்த நெருஞ்சு முற்கள் !