CHALLENGE TO GOLD
பூமிக்கடியில் தங்கம்
இருக்கும் இடம் அறிந்து, குகையை அமைத்து
தங்கம் வெட்டி எடுக்க
அது கட்டித் தங்கம் இல்லை
பாறை, மண்ணுடன் சேர்ந்து வரும் தங்கம்
அதனைப் பிரித்தெடுக்க, மிளிருது தங்கம் *****
கோலாரில் பூமிக்கு கீழ் இரண்டாயிரம் அடி சென்று
தங்க சுரங்கத்தைப் பார்த்தேன் அன்று (1979)
தங்கத் துகள்கள் பாறை மேல் மினுமினுக்க கண்டேன்
அந்த மினுமினுப்பு இன்றும் என் கண்களில் ******
தங்கத்திலான ஆபரணங்கள் அதிகம் இருக்கு பெண்ணுக்கு
கழுத்துக்கு தங்கம்
காதுகளுக்கு தங்கம்
கைகளுக்கு தங்கம்
கை விரல்களுக்கு தங்கம்
மூக்குக்கும் தங்கம்
நெற்றிக்கும் தங்கம்
இடுப்புக்கும் தங்கம்
பெண்ணே உன்னால் தான் தங்கத்திற்கே அழகு
நீயின்றி தங்கத்திற்கு தனி அழகு இல்லை
அனால் உனக்கு உன் புன்னகையே அழகு
புன்னகை மட்டும் அணிந்து
தங்கத்தை தவிர்க்கலாம் பெண்ணே *****
30-06-2015
P Murugesa Pandian