வாழ்த்து வெண்பா

சென்ற 04.09.2015 ல் எங்கள் திருமண நாள். இனிதே 47 ஆண்டுகள் முடிந்து, 48 ஆம் ஆண்டில் நுழைகிறோம். Whattsup ல் மதுரை கண் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவ நண்பர்களுக்குத் தெரிவித்திருந்தேன். அவர்கள் அனுப்பிய வாழ்த்துகளுக்கு பதிலாக நான் அனுப்பிய வாழ்த்து வெண்பா!

இரு விகற்ப நேரிசை வெண்பா

நல்லோ ரெலாம்வாழ்த்தும் நாவினிக்கும் அன்பினுக்கே
எல்லையில்லா நன்றி நவில்வேனே – ஒல்லும்
வகையால் அவர்செழிக்க வையகத்தில் நானும் வகையாகச் சொல்லுவேன் வாழ்த்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-15, 10:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : vaazthu venba
பார்வை : 215

மேலே