நீ தாண்டி எனக்கு

என் கண்களுக்கு
நீ தாண்டி கரும்பு

என் நாவிற்கு
நீ தாண்டி தேன்

என் உடலுக்கு
நீ தாண்டி உயிர்

என் வீட்டிற்கு
நீ தாண்டி வெளிச்சம்

என் பிள்ளைக்கு
நீ தாண்டி தாய்

என் வாழ்க்கைக்கு
நீ தாண்டி துணை

என் படுக்கைக்கு
நீ தாண்டி சுவை

முடிவு செய்துவிட்டேன்
மூன்று முடுச்சு போடுகிறேன்

முந்தானை விரித்து விடு
முத்தங்கள் கொடுத்து விடு.

இல்லறம் இனிமையாய்
இருக்க இனிமேல் வாழ்ந்திடுவோம்..

தோழியாய் இருந்தது போதும்
மனைவியாய் வந்து விடு..

மங்கலமாய் வாழ்ந்திடலாம்
மரியாதை நிமித்தமாய்..

எழுதியவர் : மன்சூர் அலி, ஆவடி ,சென்னை. (6-Sep-15, 3:09 pm)
Tanglish : nee thaanti enakku
பார்வை : 89

மேலே