பெண் பார்க்க வந்தார்களாம்~~~

நெற்றியில் நீர் வடிய
கொற்றவன் முகம் பார்க்க,
கொடி இடை கண்டு
கோடி சலனம் கொள்வானோ..
கோப்பையில் குலம்பி நிறைய
குழப்பங்களால் நான் குழம்பி நிற்க,
பச்சை கோடி போல்
படர்ந்து நிற்கும் என் இச்சையெல்லாம்,
அச்சம் தவிர்த்து
மிச்சம் இல்லாமல்,
முடிப்பவன் தானோ..

வெட்கம் விவரம் இல்லாதது
அது வரையறை அறியாதது,
இது என் மூசுக் காற்று போலில்லையே
அது வீசும் வேகம் எல்லை தாண்டுதே..

பத பதக்கும் என் நெஞ்சுக்குள்ள
பதற்றம் என்னைத் தொற்றிக்கொள்ள,
பிணைந்த என் கைகள் எனக்கு பாரமாக
கோலமெல்லாம் என் கால் விரல்களின் வரைபடமே..!!

எழுதியவர் : பிரதீப் (6-Sep-15, 8:09 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 96

மேலே