கனவுக்குள் கிடைத்த வரம்
உனக்குள் நான்
விடுதலை பெறாத
ஆயுள் கைதியாகவே
இருக்கட்டுமே...
உன் நினைவின்
ஓரத்தில் நான்
நிலழாகவேனும்
வலம் வருவேனேயானால்...
உன் காதல்
என் கைசேராத
கனவாகவே
இருக்கட்டுமே...
கலையாமல் அது
நீளுமானால்,
ஊன்உணவின்றி
தவம் கிடப்பேன்;
நான் உறக்கத்தையே
வரமாக வேண்டியே...