எழுத்தில் மடக்கு மியற்றவா வா வா வா

எழுத்தை ஆளும் தென்னவா வா வா வா
இளைய பார தத்தினா வா வா வா
எழுத்தில் புலமை மிகுந்தவா வா வா வா
எழுத்தில் புதுமை புதுக்கவா வா வா வா
எழுத்தில் மடக்கு மியற்றவா வா வா வா
இயன்ற கருத்தை பதிக்கவா வா வா வா
எழுத்தில் பதத்தை கொடுக்கவா வா வா வா
இனிமை யதிலும் படைக்கவா வா வா வா

( இது பாரதியின் பாடலை அடியொற்றி எழுதப்பட்டதுதான் ஆனால் இதில்
எழுத்தின் மடங்கு இருக்கிறது
எழுத்தின் மடக்கும் இருக்கிறது எவ்வாறு இதோ இப்படி

எழுத்தை ஆளும் தென்னவா வா வா வா
எழுத்தை ஆளுது என்அவா வாவா வா
இளைய பார தத்தினா வா வா வா
இளைய பார தத்தி நாவா(க) வா வா

எழுத்தில் புலமை மிகுந்தவா வா வா வா
எழுத்தில் புலமை மிகும்தவ அவாவா வா

எழுத்தில் புதுமை புதுக்கவா வா வா வா
எழுத்தில் புதுமை புதுக்க(அ)வாவா வா வா

எழுத்தில் மடக்கு மியற்ற(அ)வாவா வாவா
இயன்ற கருத்தை பதிக்கவாவா வாவா
எழுத்தில் பதத்தை கொடுக்கவாவா வாவா
இனிமை யதிலும் படைக்கவாவா வாவா

(இதில் ஒவ்வொரு அடியிலும் வாவா என்ற 2 எழுத்துக்களின் முன்னே ‘அகரம் உச்சரிப்பில் இணைந்து அவாவா? –ஆசையா என்ற பதத்தினை தரும் அடுத்துள்ள வா வா என்ற 2 எழுத்துக்கள் விளிச்சொல்லாக வரும்
இது எழுத்து மடக்கு அல்லவா)

எழுதியவர் : சு.ஐயப்பன் (6-Sep-15, 7:51 pm)
பார்வை : 58

மேலே