இது காதலா

இதோ இந்த கல்லூரியில் தான் படிக்கி்றாள் நந்தினி. இளங்கலை பட்டப்படிப்பு இப்போதுதான் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளாள்.
மாநிறம், களையான முகம் பேருந்து நிறுத்தத்தில் நின்று தரையை பார்ப்பவள். இப்போது ஏனோ சில நாட்களாய் ஓரக்கண்ணால் என்னை சீண்டுகின்றாள், சிந்தனை ஓடியது வாசுவிற்கு. அவன் கவனிக்க தவறாத காரணம் அவள் குனிந்த தலை நிமிராது அமைதியாய் நிற்பது தான். இந்த காலத்தில் இப்படியா??? என வியந்திருக்கின்றான்.
வாசு பரபரப்பான அந்த தெருவில் கடையில் வேலை பாா்ப்பவன். 25 வயது வாலிபன்

அவளை பின் தொடர ஆரம்பித்தவன் அவள் வீட்டை தெரிந்து கொண்டான். கல்லூரி நண்பரிடையே விசாரிக்க நந்தினி என்றும் ஆள் வௌியில் தான் இப்படி கல்லூரியில் கொஞ்சம் வாலு தான் என தெரிந்து கொண்டான்.
அவள் ஓரப்பார்வை புன்னகை என உயர்வு பெற அவனும் பேச முயன்று தோற்றவனாய்,
காகிதத்தில் அலைபேசி எண் எழுதி தூக்கிப்போட்டான். எதிர்பார்த்தபடியே அழைப்பு வர இரவு பேச்சு, பரிசு பரிமாற்றம் என தொடர,,

திருப்பமாய் அமைந்தது அரவிந்த் உடனான வாசு அறிமுகம்..
அரவிந்த் பொறியியல் முதுகலைப்பட்டபடிப்பு படிப்பவன். அவன் ஆய்வு கட்டுரைக்கென சில மின்னணு பொருள் பற்றி அறிய வாசுவிடம் அறிமுகமானான். சில நாட்களிலே நட்பு பலமாக அதுவே காதலில் புயலானது அரவிந்த் தன் காதலி தன் தங்கையின் தோழி நந்தினி என கூறி புகைப்படங்களை காட்ட இதயத்தை நொறுக்கியது வாசுவிற்கு..கொஞ்சம் விசாரிக்க இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் காதலித்தது தெரிந்தது அரவிந்த் உடனான பேச்சு விடியற்காலை நேரமும் வாசுவிடம் இரவிலும் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தி பேசியிருக்கிறாள் அதீத காதலால் அவளை சந்தேகப்படவில்லை இருவரும்
தன் பிறந்த நாளில் உடம்பு சரியில்லை என வாசுவிடம் சொன்னவள் அரவிந்த் உடன் ஊர் சுற்றியிருக்கிறாள் கேட்டபோதே மனம் நொந்தது வாசுவிற்கு.
வாசுவுடன் அரவிந்தும் சேர்ந்து அவள் முன்னால் நிற்க அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஊமையாய் நின்றவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் கோபமாய் மனதில் காயங்களுடன் சென்றனர்
அவர்கள் காதலித்தது உண்மையென்பதால்



பெண் சமூகத்திற்கு கறை சோ்த்தவள்..
பாசத்திற்கு அடிப்படை பெண் எனும் போது இவள் பெண் தானோ...???

எழுதியவர் : ஷாமினி குமார் (6-Sep-15, 10:20 pm)
சேர்த்தது : ஷாமினி அகஸ்டின்
Tanglish : ithu kaathalaa
பார்வை : 271

மேலே