திருஷ்டி பொம்மை
குலதெய்வம் கூட இருக்க
கும்பிட்டு நாத்து நட்டேன்;
கதிரறுக்க ஆள் இல்ல
நூற்பாலை கடை திறக்க!
சங்கிலிய அடகு வெச்சு
வங்கியில பணம் வாங்க;
கூலிக்கே பத்தவில்ல
குலத்தொழிலும் வேறு இல்ல!
நிம்மதிய நெஞ்சில் வெச்சு
பாடுபட்டேன்; இஷ்டப்பட்டு நஷ்டப்பட்ட
கதையாச்சு, மனசுக்குள்ள
மண்ணாசையும் விட்டு போச்சு!
வேதனையில் பங்கெடுக்க வேண்டி
நின்னேன்; ஆறுதல் சொல்ல
அருகில் வந்து நிக்குதைய்யா
நான் வெச்ச திருஷ்டிபொம்ம..!!