சிப்பிகளும், முத்துக்களும்

ஆரவார அலைகள் என்றும்
வாரிவந்து கரை இறைப்பவை
வரையறை இல்லாச் சிப்பிகள்!

அமைதியான ஆழ்கடலின்
அடியில் அமிழ்ந்து கிடப்பவை
அழகு மிளிரும் முத்துக்கள்!

மனஅலைகள் பொங்கித் ததும்பையில்
மனிதர் புரியும் செயல்கள் யாவும்
மதிப்பில் குறை சிப்பிகள்!

மனஅமைதி கொண்டு சிந்தித்து
மனிதர் புரியும் செயல்கள் யாவும்
மதிப்பில் உயர் முத்துக்கள் !

எழுதியவர் : (9-Sep-15, 7:03 pm)
பார்வை : 112

மேலே